மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு, இணையக் குற்றங்கள் தடுப்பு நடவடிக்கைத் தொடர்பான மாநாடு
இடுகை இடப்பட்ட நாள்:
07 SEP 2026 10:42AM by PIB Chennai
ஆசியா பசிபிக் தொலைதொடர்பு தகவல் மையம் சார்பில், இணைய சேவை மேம்பாடு குறித்த மாநாடு மும்பையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 600-க்கும் மேற்பட்ட இணையதள நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழிநுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டனர். மத்திய மின்னணு தகவல்தொழில்நுட்ப அமைச்சகம், மகாராஷ்டிரா அரசு ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு சேவை, இணையக் குற்றங்கள் தடுப்பு, இணைய சேவைப் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இணைய சேவையில் எதிர்கொள்ளும் சவால்கள், வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
மாநாட்டில் பேசிய மத்திய மின்னணு, தகவல் தொடர்புதுறை இணைச் செயலாளர் சுஷில் பால், இந்தியாவில் டிஜிட்டல் சூழலமைப்பை விரிவாக்கம் செய்வது, பாதுகாப்பை உறுதி செய்வது, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இணையதளச் சேவைக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுப்பது அவசியம் என குறிப்பிட்டார். இந்தியாவின் இணைய சேவையை பலப்படுத்தவும், தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் இந்த மாநாட்டின் மூலம் ஆசிய பசிபிக் தொலைத்தொடர்பு தகவல் மையம் அடித்தளம் அமைத்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307289®=3&lang=1
***
TV/LN/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2307498)
வருகையாளர் எண்ணிக்கை : 13