சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் நியமனம்

இடுகை இடப்பட்ட நாள்: 06 SEP 2026 7:25PM by PIB Chennai

மத்திய அரசின் சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை, தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்துக்குத் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்களை நியமித்துள்ளது.

திரு பகவத் பிரசாத் மக்வானா ஆணையத்தின் தலைவராகவும், திரு கைஷப் பிஹாரி துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். திரு மனோஜ் குமார் பால்மீகி, திருமதி சுஷ்மா கௌடியால், திரு ரவி ராமு கலோஸ் ஆகியோர் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள், 2028 மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

தலைவர் திரு பகவத் பிரசாத் மக்வானா, பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் சமூகப் பணிகளில், குறிப்பாக பட்டியல் வகுப்பு சமூகங்களின் நலன், மேம்பாடு தொடர்பான விஷயங்களில், பரந்த அனுபவம் கொண்டவர். இவர் இதற்கு முன்னர் உத்தராகண்ட் அரசின் தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு கைஷப் பிஹாரி, பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஒடிசாவைச் சேர்ந்த, விவசாயியான இவர், பட்டியல் வகுப்பு, பழங்குடியினர் மேம்பாட்டிற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307213&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2307236) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi