அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

தொழில்துறையினரும் ஆராய்ச்சித் துறையினரும் இணைந்து செயல்படுவது வணிகமயமாக்கலை விரைவுபடுத்தும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 06 SEP 2026 5:30PM by PIB Chennai

தொழில்துறையினர் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே ஆராய்ச்சித் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை  இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற 6-வது ஆராய்ச்சித் துறை சார்ந்த தொழில்முனைவு மாநாட்டில், தொழில்துறை தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் அறிவியல் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது பேசிய அவர், தொழில்துறையும் ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்து செயல்படும் விதத்தில் அடிப்படை மாற்றம் தேவை என்று அழைப்பு விடுத்தார். திட்டமிடல் கட்டத்திலேயே சாத்தியமான பிரிவுகளை அடையாளம் கண்டு இணைந்து செயல்பட வேண்டும் என்றும், இதன் மூலம் சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப நடைமுறைச் சாத்தியக்கூறுகளை வடிவமைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழில்துறையின் ஆரம்பக்கட்டப் பங்கேற்பானது, சந்தை நிலவரங்கள், வடிவமைப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, விநியோகத் தேவைகள் மற்றும் வணிக ரீதியான சாத்தியக்கூறுகள் குறித்த முக்கிய உள்ளீடுகளை வழங்கிட ஏதுவாக அமையும் என்று அவர் தெரிவித்தார். ஒரு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுச் சந்தைக்கு வந்த பிறகு, அதன் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதில் மாற்றங்களைச் செய்யும் நிலை ஏற்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடல், தொழில்துறையினர் தங்களின் குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் சவால்களை அமைச்சரிடம் நேரடியாக முன்வைப்பதற்கான ஒரு தளமாக அமைந்தது. இத்துறையினரின் வளர்ச்சிக்கு அரசும் அறிவியல் நிறுவனங்களும் தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்கும் என்று தொழில்துறையினருக்கு அமைச்சர் உறுதியளித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307169&reg=48&lang=1

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2307202) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , Urdu , English , Marathi