அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

ரைஸ் மாநாடு இந்தியாவின் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 06 SEP 2026 2:18PM by PIB Chennai

பெருநகரங்களைத் தாண்டி சிறிய நகரங்களிலும் புத்தொழில் சூழல் அமைப்பை விரைவுபடுத்துவதற்கு வலுவான ஒருங்கிணைப்பு அவசியம் என மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற 6-வது ஆராய்ச்சித் துறை சார்ந்த தொழில்முனைவு (ரைஸ்) என்ற மாநாட்டின் தொடக்க அமர்வில் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களின் புத்தொழில் நிறுவனங்களின் ஆற்றலை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.

புத்தொழில் நிறுவனங்கள், தொழில்துறைப் பிரதிநிதிகள், வழிகாட்டிகள், ஆராய்ச்சியாளர்கள் அரசுப் பிரதிநிதிகளை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைப்பதன் மூலம், ரைஸ் மாநாடு ஒரு சிறந்த தளத்தை வழங்குகிறது என்று அமைச்சர் கூறினார். அறிவியல் ஆராய்ச்சி ஆய்வகங்களுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், தொழில்முனைவு, தொழில்நுட்பப் பரிமாற்றம், வணிகமயமாக்கல், பரந்த சமூகப் பயன்பாடு ஆகியவற்றை நோக்கி நகர்வதை உறுதிசெய்ய இந்த ஒன்றிணைப்பு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசின் முழுமையான அணுகுமுறையானது, பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வித்துறை, தொழில்துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து வருகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

இந்திய ஆய்வகங்களில் இருந்து வெளிவரும் உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை, ஆதரிப்பதற்கும், நிதியளிப்பதற்கும் வணிகமயமாக்குவதற்கும் தொழில்துறை முன்வர வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். அறிவியல் திட்டங்களும் புத்தொழில் நிறுவனங்களும் தனித்து இயங்க முடியாது என்றும், அவற்றுக்கு வணிக, தொழில்துறைகளுடன் பரஸ்பர உறவு தேவை என்றும் அவர் கூறினார்.

நாளை (செப்டம்பர் 7) வரை இரண்டு நாட்கள் இந்த மாநாடு நடைபெறுகிறது

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307127&reg=48&lang=1

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2307183) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: Marathi , English , Urdu , हिन्दी