சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநில பல்லுயிர் வாரியங்களின் 16-வது தேசிய மாநாடு - மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 06 SEP 2026 1:32PM by PIB Chennai

மாநில பல்லுயிர் வாரியங்கள்/ யூனியன் பிரதேச பல்லுயிர் மன்றங்களின் 16-வது தேசிய மாநாடு இன்று (06.09.2026) சண்டிகரில் தொடங்கியது. தேசிய பல்லுயிர் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு, 2026 செப்டம்பர் 6 முதல் 7 வரை நடைபெறும். இந்த இரண்டு நாள் தேசிய மாநாடு, நாடு முழுவதிலுமிருந்து, உயர்நிலை அதிகாரிகள், வல்லுநர்கள் விஞ்ஞானிகளை ஒன்றிணைக்கிறது.

தொடக்க அமர்வுக்கு பஞ்சாப் ஆளுநரும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியுமான திரு குலாப் சந்த் கட்டாரியா, மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங் ஆகியோர் தலைமை வகித்தனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு குலாப் சந்த் கட்டாரியா, இந்தியாவின் வளமான உயிரியல் பாரம்பரியத்தையும், பாரம்பரிய சுற்றுச்சூழல் நெறிமுறைகளையும் எடுத்துரைத்தார்பாரம்பரிய அறிவையும் சமூகப் பங்களிப்பையும் தற்கால அணுகுமுறைகளுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் இந்தியாவின் நீண்டகால சுற்றுச்சூழல் நெறிமுறைகளை எடுத்துரைத்தார். மேலும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் தொடங்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், அன்னையின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கம், அமிர்த நீர் நிலைகள் இயக்கம் போன்ற முன்முயற்சிகளையும் அவர் குறிப்பிட்டார். சூழல் பாதுகாப்புப் பயணத்தில் இந்தியா தனது அறிவியல் ஆற்றலையும், பாரம்பரிய சமூக ஞானத்தையும் ஒருங்கே எடுத்துச் செல்கிறது என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307120&reg=48&lang=1

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2307150) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Malayalam