குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குவஹாத்தியில் உள்ள கீதாநகர் கல்லூரியின் பொன்விழா கொண்டாட்டத்தில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

பிரதமர் திரு நரேந்திர மோடி வடகிழக்குப் பகுதியின் வளர்ச்சிக்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கிறார்: குடியரசு துணைத்தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 06 SEP 2026 2:02PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், இன்று (06.09.2026) குவஹாத்தியில் உள்ள, கீதாநகர் கல்லூரியின் பொன்விழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார். மேலும், அவர் கல்லூரியின் புதிய கல்விக் கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், கீதாநகர் கல்லூரி அசாமின் கல்வி, சமூக வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளது என்று கூறினார். அசாம் வளமான கலாச்சார பாரம்பரிய, மரபுகளைக் கொண்ட பூமி என்று விவரித்தார். இதன் மொழிகள், இலக்கியம், இசை, நடனம், நாடகம்பழங்குடி மரபுகள் ஆகியவை மூலம் இந்தியாவின் கலாச்சாரத்துக்கு அம்மாநிலம் ஆற்றும் தனித்துவமான பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார்தேசத்திற்கு நிலையான உத்வேகத்தின் ஆதாரமாக விளங்கும் லச்சித் போர்புகனின் வீரத்தையும் தேசபக்தியையும் அவர் நினைவு கூர்ந்தார்.

வடகிழக்குப் பகுதியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி அளித்து வரும் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். அசாம், வளமான இயற்கை வளங்கள், காடுகள் மற்றும் உலகப் புகழ்பெற்ற தேயிலை ஆகியவற்றின் மூலம், மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும், அம்மாநிலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக் கட்டத்தைக் கண்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில், அசாம் ஆளுநர் திரு லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, அசாம் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாம் கல்வி அமைச்சர் டாக்டர் ரனோஜ் பெகு, அசாம் தலைமைச் செயலாளர் டாக்டர் ரவி கோட்டா உள்ளிட்ட பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307124&reg=48&lang=1

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2307142) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Malayalam