தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஏபிபியு பொதுச் செயலாளராக டாக்டர் வினய பிரகாஷ் சிங் மீண்டும் தேர்வு
இடுகை இடப்பட்ட நாள்:
06 SEP 2026 10:04AM by PIB Chennai
இந்திய அஞ்சல் சேவையின் 1988 தொகுதி அதிகாரியான டாக்டர் வினய பிரகாஷ் சிங், ஆசிய-பசிபிக் அஞ்சல் ஒன்றியமான ஏபிபியு-வின் பொதுச் செயலாளராக தொடர்ந்து இரண்டாவது முறையாக நான்கு ஆண்டு காலத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2026 செப்டம்பர் 4 அன்று பாங்காக்கில் நடைபெற்ற 14-வது ஏபிபியு மாநாட்டில், அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அவரது மறுதேர்வு, ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் உள்ள அஞ்சல் நிர்வாகங்கள் அவரது தலைமை மீது வைத்துள்ள நம்பிக்கையையும் ஒருமித்த கருத்தையும் பிரதிபலிக்கிறது. அத்துடன் சர்வதேச அளவில் அஞ்சல் துறை ஒத்துழைப்பிற்கு இந்தியா ஆற்றிய பங்களிப்பிற்கான ஒரு குறிப்பிடத்தக்க அங்கீகாரமாகவும் இது அமைந்துள்ளது. அவரது இரண்டாவது பதவிக்காலம் 2027 ஜனவரியில் தொடங்கி 2030 டிசம்பர் வரை நீடிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307088®=48&lang=1
***
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2307135)
வருகையாளர் எண்ணிக்கை : 7