அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

நகர்ப்புறச் சாலைகளை அமைப்பது குறித்து தில்லி பொதுப்பணித்துறைப் பொறியாளர்களுக்குச் சிறப்புப் பயிற்சித் திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 05 SEP 2026 5:31PM by PIB Chennai

சிஎஸ்ஐஆர் - மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (CRRI), தில்லி தேசியத் தலைநகரப் பிரதேச அரசின் பொதுப்பணித்துறைப் பொறியாளர்களுக்காக ஒரு சிறப்புப் பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்தது. தேசியத் தலைநகரப் பகுதி முழுவதும் நகர்ப்புறச் சாலைகளை அமைத்தல், அவற்றைப் பசுமையாக்குதல் மற்றும் காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் தரநிலைகளைச் செயல்படுத்துதல் ஆகியவற்றை இத்திட்டம் மையமாகக் கொண்டிருந்தது.

சிஆர்ஆர்ஐ இயக்குநர் டாக்டர் சி. ரவி சேகர் தொடக்கவுரையாற்றினார். அவருடன் தில்லி பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர் திரு. நவீன் பன்சால், சிறப்புச் செயலாளர் திரு. ரவி ஜா ஆகியோரும் உரையாற்றினர். சாலைகளில் தூசியைக் கட்டுப்படுத்தவும், தில்லியின் ஒட்டுமொத்தக் காற்றின் தரத்தை மேம்படுத்தவும் அறிவியல் பூர்வமான சாலை வடிவமைப்பு நுட்பங்களின் முக்கியப் பங்கு குறித்து அவர்கள் பேசினர்.

தலைநகரின் சாலைக் கட்டமைப்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கும் வகையில், சிஆர்ஆர்ஐ விஞ்ஞானிகளும் பொதுப்பணித்துறைப் பொறியாளர்களும் பங்கேற்ற கலந்துரையாடல் அமர்வுடன் இந்நிகழ்வு நிறைவடைந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்தக் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306981&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2307034) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी