உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியையொட்டி நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 04 SEP 2026 8:54PM by PIB Chennai

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியையொட்டி  மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, நாட்டு மக்களுக்குத்  தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்த நன்னாளில் புதுதில்லியில் உள்ள பிர்லா மந்திர் சென்ற அவர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு, குடிமக்கள் அனைவரின் மகிழ்ச்சி, அமைதி, செழிப்புக்காகப் பிரார்த்தனை செய்தார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர் பதிவுகளில் திரு அமித் ஷா குறிப்பிட்டதாவது:

 

" 'ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி' என்ற புனித நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். அறம், நீதி, பொது நலனின் வடிவமாகத் திகழும் யோகேஸ்வரர் ஸ்ரீ கிருஷ்ண பகவான், அனைவர் மீதும் தனது அருளைப் பொழியட்டும். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா."

 

"ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! 'ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி' என்ற புனிதப் பண்டிகை  நாடு முழுவதும் மிகுந்த மரியாதையுடனும், பக்தியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளில், புதுதில்லியில் உள்ள பிர்லா மந்திர் சென்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டதுடன், நாட்டு மக்கள் அனைவரின் மகிழ்ச்சி, அமைதி, செழிப்புக்காகவும் பிரார்த்தனை செய்தேன்."

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2306830&reg=3&lang=1

****

SS/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2306857) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Marathi , Gujarati