புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட்டில் பதக்கங்களை வென்ற இந்திய பள்ளி மாணவர்களுக்கு மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 04 SEP 2026 4:26PM by PIB Chennai

மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று (04.09.2026) புதுதில்லி லோதி சாலையில் உள்ள பிருத்வி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், '19-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் - 2026' நிகழ்வில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களைப் பாராட்டி, அவர்களுடன் கலந்துரையாடினார்.

2026 ஆகஸ்ட் 20 முதல் 27 வரை இத்தாலியின் டுரின் நகரில் சர்வதேச புவி அறிவியல் அமைப்பின் ஆதரவில் நடைபெற்ற 19-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய மாணவர்கள், 39 நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களுடன் போட்டியிட்டு, 4 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் ஒன்பது பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தனர்.

இந்த மகத்தான மைல்கல் சாதனையைப் பாராட்டிய டாக்டர் ஜிதேந்திர சிங், நாட்டிற்குப் பெருமை சேர்த்த வெற்றியாளர்களையும், பெற்றோர்களையும், பள்ளிகளையும் பாராட்டினார். அமைச்சகத்தின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்த அமைச்சர், அடிப்படை அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதிலும், புவி அறிவியல் தொடர்பாக இளம் உள்ளங்களை ஊக்குவிப்பதிலும் அரசு ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306720&reg=3&lang=1

----

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2306789) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , English , Urdu , Marathi , हिन्दी