பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு இயக்கம் 3-ல், ஓய்வூதியம் தொடர்பான 2,306 குறைகளுக்குத் தீர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 04 SEP 2026 2:00PM by PIB Chennai

ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலத்துறையானது, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் நலனுக்காகவும், அவர்களின் குறைகளுக்கு எளிதில் தீர்வுகளை காண்பதற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இதற்காக, 2024-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிறப்பு இயக்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இதன் மூன்றாவது பதிப்பில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஓய்வூதியதாரர் குறைகள் / கோரிக்கைகள் / பிரச்சனைகளுக்கு விரைவில் சிறந்தத் தீர்வைக் காண்பதற்காக, இத்துறை 2026 ஜூலை 7-ம் தேதி சிறப்பு இயக்கம் 3-ஐ தொடங்கியது. இந்த இயக்கம், ஆயத்தக் கட்டம், செயலாக்கக் கட்டம் என இரண்டு கட்டங்களாக நடைபெற்று, 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி நிறைவடைந்தது.

ஆயத்தக் கட்டத்தின் போது, ஆய்வுக்குப் பின் குறைகள் தீர்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. செயல்படுத்தும் கட்டத்தின் போது, இந்தக் குறைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இத்துறை அமைச்சகங்கள் / துறைகளுடன் தீவிரமாக ஒருங்கிணைந்து செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

40 அமைச்சகங்கள் / துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 3,193 குறைகளில் 2,306 குறைகளுக்கு வெற்றிகரமாகத் தீர்வு காணப்பட்டு, 72% குறைதீர்ப்பு விகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய குறைகளைத் தீர்ப்பதற்காகத் தீவிரமான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306679&reg=3&lang=1

------

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2306788) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu , Telugu