சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மேற்கு வங்கத்தில் தூய்மை பணியாளர்களுக்கான தொழில்பாதுகாப்பு பயிற்சி துவக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
03 SEP 2026 5:46PM by PIB Chennai
மேற்கு வங்கத்தில் உள்ள துர்காபூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான 'நமஸ்தே' திட்டத்தின் தொழில்பாதுகாப்புப் பயிற்சி வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ், சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ அமைப்பின் தொழில்நுட்ப ஆதரவுடன் இப்பயிற்சித் திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்க நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி விவகாரத்துறை அமைச்சர் திருமதி அக்னிமித்ரா பால் இப்புதிய பயிற்சியைத் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். தூய்மைப்பணியாளர்களுக்கு பாதுகாப்பான, கௌரவமான மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட பணிச்சூழலை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
இம்மாநிலத்தில் இதுவரை 7,630 கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் தூய்மைப் பணியாளர்கள் கணக்கிடப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவசர காலத் தேவைகளுக்காகப் பணியாளர்களின் இரத்த வகைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஒரு சிறப்புத் தரவுத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
துர்காபூர் மாநகராட்சியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் இதில் ஆர்வமுடன் பங்கேற்றனர். இப்பயிற்சி ஐந்து நாட்களுக்கு மொத்தம் 30 மணி நேரம் நடைபெறும். இதில் ஒவ்வொரு தொகுப்பிலும் அதிகபட்சமாக 45 பணியாளர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெறுவர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2306424®=3&lang=1
செய்திக்குறிப்பு அடையாள எண்: 2306424
****
SS/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2306602)
வருகையாளர் எண்ணிக்கை : 8