மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

செயல்பாட்டுத் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவுக் காலத்திற்குத் தேவையான எதிர்காலப் பணிக்குழுவைத் தயார் செய்தல் குறித்த உரையாடல் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 03 SEP 2026 11:13AM by PIB Chennai

மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின்னணு, தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இண்டெல் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து புதுதில்லியில் செயல்பாட்டுத் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவுக் காலத்திற்குத் தேவையான எதிர்காலப் பணிக்குழுவைத் தயார் செய்தல் தொடர்பான தேசிய அளவிலான தலைமைத்துவ உரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

விரைவாக வளர்ச்சியடைந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் துறை, நாட்டின் எதிர்கால வேலைவாய்ப்பு, கல்வி, பணியாளர் திறன் மேம்பாடு ஆகியவற்றில் அது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து விவாதிக்க, அரசு, வெளிநாட்டுத் தூதரகங்கள், கல்வித் துறையினர், தொழில்துறை, திறன் மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களை இந்த உரையாடல் ஒருங்கிணைத்தது.

இந்நிகழ்ச்சியில், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத் தலைவர் திரு சசி சேகர் வேம்பட்டி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இந்த உரையாடலில் செயல்பாட்டுத் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் ஏற்படும் சவால்கள் குறித்தும், செயற்கை நுண்ணறிவுச் சார்ந்த பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் நாட்டின் பணியாளர்களின் தயார்நிலையை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306216&reg=3&lang=1  

***

SS/IR/GS/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2306290) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali , Kannada