பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியப் விமானப் படையின் பராமரிப்புப் பிரிவுத் தலைவராக ஏர் மார்ஷல் கேஏஏ சஞ்ஜிப் பொறுப்பேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
01 SEP 2026 7:22PM by PIB Chennai
இந்திய விமானப் படையின் பராமரிப்புப் பிரிவுத் தலைவராக ஏர் மார்ஷல் கேஏஏ சஞ்ஜிப் 2026, செப்டம்பர் 1 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்றதும் தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
1988 செப்டம்பர் 3 அன்று விமானப் படையில் இணைந்த இவர், ஐஎல்-76 மற்றும் போயிங் விமானப் பராமரிப்பில் நீண்ட அனுபவம் பெற்றவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சேவையில் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ள இவர், 2015-ல் விசிஷ்ட சேவா பதக்கமும் , 2026-ல் அதி விசிஷ்ட சேவா பதக்கமும் பெற்றுள்ளார். பணிநிறைவு பெற்ற ஏர் மார்ஷல் சஞ்சீவ் குராதியாவுக்குப் பதிலாக இவர் இப்பொறுப்பை ஏற்றுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305675®=3&lang=1
செய்திக்குறிப்பு அடையாள எண்: 2305675
****
SS/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2305758)
வருகையாளர் எண்ணிக்கை : 8