பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் வருடாந்திர செயல்திறன் குறித்து மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆய்வு

இடுகை இடப்பட்ட நாள்: 01 SEP 2026 6:12PM by PIB Chennai

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இன்று (2026 செப்டம்பர் 01) புதுதில்லியில் 16 பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் வருடாந்தரச் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இக்கூட்டத்தின் போது, ​​பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் ஆகியோருக்கு, இந்த நிறுவனங்களின் முக்கிய சாதனைகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

 

உள்நாட்டு உற்பத்தி, தயாரிப்புத் திறன்களை மேம்படுத்துதல், மேம்பட்ட பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை உருவாக்குதல், பாதுகாப்பு ஏற்றுமதியை அதிகரித்தல், முக்கியத் திட்டங்களை விரைந்து செயல்படுத்துதல் ஆகியவற்றில் இந்த நிறுவனங்கள் அடைந்துள்ள முன்னேற்றங்களை பாதுகாப்பு அமைச்சர் ஆய்வு செய்தார்.

 

 

தமது உரையில், பாதுகாப்புத் துறை அமைச்சர், ஒரு வலுவான பாதுகாப்புத் தொழில் சூழலமைப்பை உருவாக்கும் அதே வேளையில் தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கு, அரசுப் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் ஆற்றிவரும் உறுதியான பங்களிப்பைப் பாராட்டினார். அனைத்து 16 அரசுப் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களும் பல துறைகளில் தங்களது சாதனைகளை வெளிப்படுத்தி வருவதாகக் கூறிய அவர், அந்த நிறுவனங்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு வாழ்த்து தெரிவித்தார். 2025-26-ம் ஆண்டில், அரசுப் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பாக ரூ.1.29 லட்சம் கோடியுடன், இந்தியா சுமார் ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு உற்பத்தியை எட்டியுள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். இந்தச் சாதனை, ஒரு தற்சார்பு பாதுகாப்புத் தொழில் தளத்தை உருவாக்குவதில் தேசம் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தின் பிரதிபலிப்பு என்று அவர் குறிப்பிட்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305615&reg=3&lang=1

(Release ID : 2305615)

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2305751) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi