மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
புதுச்சேரியில் ரூ.36.49 கோடி மதிப்பிலான மீன்வளத் துறைத் திட்டங்கள் - மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 SEP 2026 4:26PM by PIB Chennai
மீன்வளத் துறை, மீன்வள உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், கடலோரச் சமூகங்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை வழங்கவும், கூட்டுறவு அணுகுமுறை மூலம் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மீன்வள உள்கட்டமைப்புத் திட்டங்களின் தொடக்க விழாவும், கூட்டுறவு முறையில் கடற்பாசி வளர்ப்பிற்கான பன்முகத் திறன் மேம்பாட்டு மாநாடும் இன்று (2026 செப்டம்பர் 1) புதுச்சேரி , காமராஜர் மணிமண்டப்பத்தில் நடைபெற்றது.
இந்த மக்கள் தொடர்பு நிகழ்ச்சியில், மத்திய மீன்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் கலந்துகொண்டார். இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே கைலாசநாதன், புதுச்சேரி முதலமைச்சர் திரு என் ரங்கசாமி, உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ராஜீவ் ரஞ்சன் சிங், பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இன்று தொடங்கி வைக்கப்பட்ட மூன்று திட்டங்களும் வெறும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் மட்டுமல்ல எனவும், அவை மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நீண்டகால அம்சம் என்றும் குறிப்பிட்டார். நாட்டின் மீன் உற்பத்தி 2013-14-ம் ஆண்டில் 95.7 லட்சம் டன்களிலிருந்து 2024-25-ம் ஆண்டில் 197.7 லட்சம் டன்களாக அதிகரித்துள்ளது என்றும், அதே காலகட்டத்தில் மீன் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த மாநாட்டின் போது, மத்திய அமைச்சர், நல்லவாடுவில் ரூ.18.94 கோடி மதிப்பிலான மீன் இறங்கு மையம், புதுச்சேரி மீன்பிடித் துறைமுகத்தை ரூ.15.63 கோடி செலவில் மேம்படுத்துதல், காரைக்காலில் கடற்பாசி வளர்ப்பில் திறன் மேம்பாட்டிற்கான ரூ.1.92 கோடி மதிப்பிலான மேம்பட்ட மையம் உள்ளிட்ட ரூ.36.49 கோடி மதிப்பிலான மீன்வள உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305499®=3&lang=1
----
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2305691)
வருகையாளர் எண்ணிக்கை : 6