விவசாயத்துறை அமைச்சகம்
பிரதமரின் தன தானிய வேளாண் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் ஆய்வு
இடுகை இடப்பட்ட நாள்:
01 SEP 2026 4:28PM by PIB Chennai
மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், இன்று (01.09.2026) புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில், தன்-தான்ய கிருஷி யோஜனா எனப்படும் பிரதமரின் தன தானிய வேளாண் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார். அடையாளம் காணப்பட்ட 100 மாவட்டங்களில் இத்திட்டச் செயலாக்கத்தை விரைவுபடுத்துதல், ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், மாவட்ட அளவிலான செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்த ஆய்வு கவனம் செலுத்தியது. ஆய்வின் போது, திட்டத்தின் முன்னேற்றம் குறித்து, அத்திட்டத்தின் தகவல் பலகை மூலம் அமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டது.
குறைந்த வேளாண் உற்பத்தித்திறன் கொண்டதாக அடையாளம் காணப்பட்ட 100 மாவட்டங்களில் வேளாண் வளர்ச்சியை விரைவுபடுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டம் ஆறு முக்கிய நோக்கங்களில் கவனம் செலுத்துகிறது:
வேளாண் உற்பத்தித்திறனை அதிகரித்தல்;
நிலையான வேளாண் நடைமுறைகளை ஊக்குவித்தல்
அறுவடைக்குப் பிந்தைய சேமிப்புத் திறனை மேம்படுத்துதல்
நீர்ப்பாசன உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்
குறுகிய, நீண்ட கால வேளாண் கடனுக்கான அணுகலை அதிகரித்தல்; நிர்வாகத்தையும் சேவை வழங்கலையும் மேம்படுத்துதல்
ஒவ்வொரு மாவட்ட தன தானிய திட்டக் குழுவிலும் இரண்டு முற்போக்கு விவசாயிகளை நியமிப்பதன் மூலம் விவசாயிகளின் பங்கேற்பை வலுப்படுத்துவது குறித்தும் இந்த ஆய்வில் பரிசீலிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305501®=3&lang=1
----
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2305690)
வருகையாளர் எண்ணிக்கை : 5