பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயுதப்படை மருத்துவச் சேவைகளின் தலைமை இயக்குநராக ஏர் மார்ஷல் சந்தீப் தரேஜா பொறுப்பேற்றுக்கொண்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 SEP 2026 4:55PM by PIB Chennai

ஆயுதப்படை மருத்துவச் சேவைகளின் 47-வது தலைமை இயக்குநராக ஏர் மார்ஷல் சந்தீப் தரேஜா 2026 செப்டம்பர் 1 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பாதுகாப்புப் படையினருக்கு விரிவான மருத்துவச் சேவைகள் வழங்கப்படுவதை மேற்பார்வையிடுவார். செயல்பாட்டு ரீதியான மருத்துவ தயார் நிலை, கூட்டுச் செயல்பாடு, ராணுவ சுகாதாரச் சேவையின் நவீனமயமாக்கல், டிஜிட்டல் சுகாதாரம், மருத்துவ ஆராய்ச்சி, புதுமைக்கண்டுபிடிப்பு, மனிதவள மேம்பாடு, தற்போது பணியில் உள்ளவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அவர்களது குடும்பத்தினர் ஆகியோருக்கு உயர்தர சுகாதாரச் சேவைகளை வழங்குதல் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வரும் சூழலில் ஆயுதப்படை மருத்துவச் சேவைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் ஒரு பகுதியாக அவருடைய நியமனம் அமைந்துள்ளது.

புனேயில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவரான ஏர் மார்ஷல் தரேஜா 1986-ம் ஆண்டு டிசம்பரில் ராணுவ மருத்துவப்படையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சிறந்த மருத்துவராகவும், இரைப்பை குடல் மருத்துவ நிபுணராகவும் உள்ள அவர், தில்லியில் மருத்துவத்தில் எம்டி பட்டத்தையும், புதுதில்லி எய்ம்ஸில் இரைப்பை குடல் மருத்துவத்தில் டிஎம் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தில்லி கண்டோன்மென்ட் மருத்துவமனையில் அவர் பணியாற்றியபோது சிக்கல்மிக்க சுகாதார, நிர்வாகச் சவால்களைச் சிறப்பாகக் கையாண்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305525&reg=3&lang=1

***

SS/IR/PS/ SH  


(வெளியீட்டு அடையாள எண்: 2305682) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी