ரெயில்வே அமைச்சகம்
குஜராத்தில் பாவ்நகர் பாரா முனையத்தை ரூ.125 கோடி செலவில் மறுசீரமைக்க இந்திய ரயில்வே ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
01 SEP 2026 2:27PM by PIB Chennai
குஜராத்தில் பாவ்நகர் பாரா முனையத்தை சுமார் ரூ.125 கோடி செலவில் மறுசீரமைக்க இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் கூடுதல் செயல்திறனாலும் பயணிகளுக்கான வசதியை மேம்படுத்துவதாலும் பாவ் நகரில் ரயில் உள்கட்டமைப்பு வலுப்பெறும்.
இத்திட்டம் ரயில் நிறுத்துமிடம், இதரச் செயல்பாடுகளை பாவ் நகர் பாரா முனையத்திற்கு மாற்றுவதன் மூலம் பாவ் நகர் முனையத்தில் பயணிகளின் நெரிசல் குறையும். இது ரயில்களின் சேவையைச் சீராக்கவும், நேரம் தவறாமையை மேம்படுத்தவும் உதவும்.
இந்த மறுசீரமைப்புப் பணிகளில் புதிய நடைமேடை, பயணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட வசதிகள், நான்கு இணைப்புப் பாதைகள், உயர்மட்ட பயணிகளுக்கான நடைமேடை, தற்போதுள்ள நடைமேடையை அகலப்படுத்துதல், உள்ளிட்டவை அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305412®=3&lang=1
***
SS/IR/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2305657)
வருகையாளர் எண்ணிக்கை : 7