ரெயில்வே அமைச்சகம்
சமஸ்திபூர் கோட்டத்தின் 21 நிலையங்களில் ரூ.233 கோடி செலவில் மின்னணு இன்டர்லாக்கிங் அமைப்பதற்கு இந்திய ரயில்வே ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
01 SEP 2026 11:35AM by PIB Chennai
கிழக்கு மத்திய ரயில்வேயின் சமஸ்திபூர் கோட்டத்தின் 21 நிலையங்களில் ரூ.233 கோடி செலவில் மின்னணு இன்டர்லாக்கிங் அமைப்பதற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் சமஸ்திபூர் கோட்டத்தின் 21 நிலையங்களில் தற்போதுள்ள பேனல் இன்டர்லாக்கிங் அமைப்புக்குப் பதிலாக மின்னணு இன்டர்லாக்கிங் அமைப்பு நிறுவப்படும். இந்த நவீன சிக்னல் அமைப்பு இக்கோட்டத்தில் ரயில்வே சமிக்ஞை உள்கட்டமைப்பை வலுப்படுத்தும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பான, கவாச்-ஐ செயல்படுத்துவதற்கு வழிவகுக்கும்.
மின்னணு இன்டர்லாக்கிங் அமைப்பு மூலம் ரயில் நிலையங்களில் உள்ள சமிக்ஞை முறைகள் நவீனமயமாக்கப்படும். மேலும், கவாச் பணிகளுடன் தொடர்புடைய மேம்பட்ட சிக்னல் உள்கட்டமைப்பை அளிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305326®=3&lang=1
***
SS/IR/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2305653)
வருகையாளர் எண்ணிக்கை : 10