பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அறுவை சிகிச்சை நிபுணர் வைஸ் அட்மிரல் மனிஷ் ஹோன்வாத் புனேயிலுள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியின் இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 SEP 2026 11:37AM by PIB Chennai

அறுவை சிகிச்சை நிபுணர் வைஸ் அட்மிரல் மனிஷ் ஹோன்வாத் புனேயிலுள்ள ஆயுதப்படை மருவத்துவக் கல்லூரியின் இயக்குநராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். 1989-ம் ஆண்டு ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் தனது எம்பிபிஎஸ் படிப்பை முடித்த அவர், பின்னர் 1998-ம் ஆண்டு மயக்க மருந்து, தீவிர சிகிச்சை மருத்துவம் ஆகியவற்றில் எம்டி பட்டம் பெற்றார். பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம், நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் நரம்பியல் - மயக்க மருந்து பிரிவில் உலகச் சுகாதார அமைப்பின் பிரதிநிதியாக உள்ளார். புதுதில்லியில் உள்ள இந்தியப் பொது நிர்வாகக் கழகத்தின் முன்னாள் மாணவரான அவர், அங்கு பொது நிர்வாகப் பாடப்பிரிவில் எம்ஃபில் பட்டமும் பெற்றுள்ளார்.

37 ஆண்டுகளுக்கு மேலான தமது பணிக்காலத்தில் கடற்படைத் தலைமையகத்தில் மருத்துவச் சேவைகள் (கடற்படை) கூடுதல் தலைமை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

நோயாளிகளின் பராமரிப்பு, சேவைகள் ஆகியவற்றுக்காக அவருக்கு 2025-ம் ஆண்டு விஷிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305332&reg=3&lang=1

***

SS/IR/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2305612) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati