மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
நேபாளத்தில் பாஷினி தளம் தொடர்பான அமர்வு : டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவு நடத்தியது
இடுகை இடப்பட்ட நாள்:
31 AUG 2026 6:43PM by PIB Chennai
மத்திய அரசின் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் இயங்கும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனின் டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவு, இன்று (31.08.2026) காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஒரு பாஷினி பயிற்சி அமர்வை ஏற்பாடு செய்தது. இந்த அமர்வு, மொழி அம்சங்களில் செயற்கை நுண்ணறிவு குறித்து ஆலோசனை நடத்தியது. இதில், நேபாளத்தைச் சேர்ந்த, தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்றனர்.
வழக்கமான தொழில்நுட்ப அமர்வைத் தாண்டி, இந்த அமர்வு, யோசனைகளையும் தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைத்து, பாஷினியுடன் புதிய பயணத்தில் பங்கேற்பாளர்களை அழைத்துச் சென்றது. அதே நேரத்தில், நிஜ உலக சவால்களை ஆராயவும், யோசனைகளைப் பரிமாறிக்கொள்ளவும், அனைவரையும் உள்ளடக்கிய, பன்மொழி டிஜிட்டல் தீர்வுகளை உருவாக்குவதற்கான புதிய சாத்தியக்கூறுகளைக் கண்டறியவும் அவர்களை இது ஊக்குவித்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2305147®=3&lang=1
(Release ID : 2305147)
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2305272)
வருகையாளர் எண்ணிக்கை : 4