சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்த ராமகிருஷ்ணா மடம், ராமகிருஷ்ணா மிஷனுடன் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இடுகை இடப்பட்ட நாள்:
31 AUG 2026 7:28PM by PIB Chennai
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமும், ராமகிருஷ்ணா மடம், ராமகிருஷ்ணா மிஷனும் இணைந்து 'தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்பை உருவாக்குதல்' என்ற தேசிய அளவிலான புதிய திட்டத்தை தில்லியில் அறிமுகப்படுத்துகின்றன. குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் தாத்தா-பாட்டிக்கு இடையேயான உணர்வுபூர்வமான, கலாச்சார உறவுகளை விளையாட்டு முறைகள் மற்றும் அறிவியல் பூர்வமான செயல்பாடுகள் மூலம் பள்ளி அமைப்புகள் வழியாக வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
நாடு முழுவதும் உள்ள 200 மாதிரிப் பள்ளிகளில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் இத்திட்டத்தில், கூட்டு கற்றல் விளையாட்டுகள், இருமொழி வள மைய இணையதளம் மற்றும் ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்குதல் ஆகியவை இடம்பெறுகின்றன. இது அமைச்சகத்தின் அடல் மூத்தோர் எழுச்சித் திட்டம் மற்றும் எடர்லைன் போன்ற ஏற்கனவே உள்ள முதியோர் நலத் திட்டங்களுடன் இணைந்து செயல்படும். இதன் மூலம் முதியவர்கள் தங்களின் அனுபவங்களையும் ஞானத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவும், பெற்றோர்கள் பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைக்கவும், குழந்தைகள் தங்கள் கலாச்சார வேர்களோடு இணைந்து உணர்வுபூர்வமான பாதுகாப்பைப் பெறவும் முடியும்.
நூறு ஆண்டுகளுக்கும் மேலான கல்வி மற்றும் சமூக சேவை அனுபவம் கொண்ட ராமகிருஷ்ணா மிஷன் இதற்கான செயல்படுத்தும் பங்காளராகச் செயல்படுகிறது. முதியோர்களை மதிப்பது மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம், ஒவ்வொரு தலைமுறையும் இணைந்து முன்னேறும் சூழல் இதன் மூலம் உருவாக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2305179®=3&lang=1
செய்திக்குறிப்பு அடையாள எண்: 2305179
****
SS/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2305259)
வருகையாளர் எண்ணிக்கை : 5