கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் வாகனத் தொழில் துறை புதிய காலகட்டத்திற்குள் நுழைகிறது - வாகனத் தொழில் துறையில் திறன் மேம்பாடு அவசியம் : மத்திய அமைச்சர் திரு எச் டி குமாரசாமி

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2026 5:51PM by PIB Chennai

புதுதில்லியில் நடைபெற்ற வாகனத் திறன் மேம்பாட்டுக் கவுன்சிலின் 2026 ஆண்டு மாநாட்டில் மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் திரு எச் டி குமாரசாமி உரையாற்றினார். மின்சார வாகனப் போக்குவரத்து, புதிய தொழில்நுட்பங்கள், ஆகியவற்றால் இந்தியாவின் வாகனத் துறை ஒரு புதிய மாற்றக் காலகட்டத்திற்குள் நுழைகிறது என்று அவர் கூறினார்.

 

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்த திரு குமாரசாமி, இந்தியா வெறும் ஒரு பெரிய வாகனச் சந்தையாக இருக்கும் நிலையைத் தாண்டி, வாகன உற்பத்தி, தொழில்நுட்பம், போக்குவரத்துத் தீர்வுகளுக்கான ஒரு முக்கிய உலகளாவிய மையமாக படிப்படியாக உருவெடுத்து வருகிறது என்று கூறினார்.

 

இந்தியாவின் லட்சியம், நமது உள்நாட்டு மனிதவளத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு நின்றுவிடக் கூடாது எனவும் திறமையான வாகனத் துறை வல்லுநர்களுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதை நாம் நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

வாகனத் துறையின் விரைவான மாற்றத்திற்கு, புதிய தொழில்நுட்பங்களுக்கும் மாறிவரும் பணியிடத் தேவைகளுக்கும் ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் திறன் கொண்ட பணியாளர்கள் தேவை என்று அமைச்சர் திரு குமாரசாமி வலியுறுத்தினார். இளம் தலைமுறையினருக்கு சரியான திறன்களை அளித்து, அந்தத் திறன்களை வேலைவாய்ப்புகளுடன் இணைக்க வேண்டும் என்று  திரு குமாரசாமி கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2305087&reg=3&lang=1

(Release ID : 2305087)

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2305250) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Kannada