குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஆராய்ச்சி சார்ந்த உயர்கல்வியும், தொழில் துறை - கல்வித்துறை இடையே வலுவான ஒருங்கிணைப்பும் அவசியம் : குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன்

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2026 5:49PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (31.08.2026) கொச்சியில் நடைபெற்ற ராஜகிரி பொறியியல், தொழில்நுட்பப் நிறுவனத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்களில் கலந்துகொண்டதோடு, “இந்தியாவில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்” என்ற தலைப்பில் அமைந்த தொழில்துறை - கல்வித்துறை மாநாடான கான்ஃப்ளூயன்ஸ் 3.0-ஐயும் தொடங்கி வைத்தார்.

 

கல்வி, சமூக மேம்பாடு ஆகியவற்றில் கேரளத்தின் சாதனைகளை எடுத்துரைத்த திரு சி பி ராதாகிருஷ்ணன், ராஜகிரி நிறுவனம் தொழில்நுட்ப வல்லுநர்களை மட்டுமல்லாமல், பொது வாழ்வில் தலைவர்களையும் உருவாக்கியுள்ளது என்று கூறினார்.

 

 உலகின் மாறிவரும் தேவைகளை எடுத்துரைத்த குடியரசு துணைத்தலைவர் கல்வியைப் பட்டங்களுக்குள் சுருக்கிக்கொள்ள முடியாது என்று கூறினார். நாம் பட்டதாரிகளை மட்டும் உருவாக்காமல் சந்தையின் தேவைகளை புரிந்துகொள்ள வேண்டும், என்று கூறிய அவர், ஆராய்ச்சி, புத்தாக்கம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

 

இந்தியாவை தொழில்நுட்ப, புத்தொழில் நிறுவனங்களுக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதற்கு, வலுவான தொழில்-கல்வித்துறை ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் கூறினார். அதே வேளையில், புதுமையான கற்பித்தல், பல்துறை ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான பயன்பாடு, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை தேவை என அவர் கூறினார்.

 

இந்த நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கேரள முதலமைச்சர் திரு வி டி சதீசன், மத்திய இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2305081&reg=3&lang=1

(Release ID : 2305081)

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2305207) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam