சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நஜாஃப்கரில் உள்ள கிராமப்புற சுகாதார பயிற்சி மையத்தின் முன்னேற்றம் குறித்து மத்திய அமைச்சர் திரு ஜே பி நட்டா ஆய்வு செய்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
31 AUG 2026 4:38PM by PIB Chennai
மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜே பி நட்டா இன்று நஜாஃப்கரில் உள்ள கிராமப்புற சுகாதாரப் பயிற்சி மையத்தின் முன்னேற்றம் குறித்து மதிப்பிடுவதற்கான ஒரு ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
மேலும் அம்மையத்தில் நோயாளி பராமரிப்பு, உள்கட்டமைப்பு, மனிதவளம், கல்விசார் நடவடிக்கைகள், டிஜிட்டல் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் செயலாக்கத்தையும் அவர் ஆய்வு செய்தார்.
2026 ஏப்ரல் 13 அன்று நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்த திரு நட்டா, தற்போது நடைபெற்றுவரும் பணிகளை உரிய நேரத்தில் நிறைவு செய்வதையும், திட்டமிடப்பட்ட பணிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதையும் உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து முகமைகளுக்கும் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டார்.
நோயாளிகளுக்கு வழங்கப்பட வேண்டியவற்றை உன்னிப்பாகக் கண்காணித்தல், மனிதவளம், உபகரணங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்தல், நோயாளிகளுக்கான தரமான பராமரிப்பு, மருத்துவப் பயிற்சியில் தொடர்ந்து கவனம் செலுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304996®=3&lang=1
***
SS/IR/LDN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2305181)
வருகையாளர் எண்ணிக்கை : 9