விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எண்ணெய் வித்துத் தொழில்நுட்பங்களின் வணிகமயமாக்கலை விரைவுபடுத்துவது குறித்து ஹைதராபாத்தில் செப்டம்பர் 10-ல் தேசிய கலந்தாய்வுக் கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2026 4:33PM by PIB Chennai

ஹைதராபாத்தில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுவின் இந்திய எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிறுவனம் (ஐசிஏஆர் - ஐஐஓஆர்),  எண்ணெய் வித்துத் தொழில்நுட்பங்களின் வணிகமயமாக்கலை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தேசிய கலந்தாய்வுதொழில்துறை சந்திப்புக் கூட்டத்தை 2026 செப்டம்பர் 10-ம் தேதி ஹைதராபாத்தில் நடத்துகிறது.

இந்தியா உலகின் முக்கிய சமையல் எண்ணெய் பொருளாதாரங்களில் ஒன்றாகும். சமையல் எண்ணெய்களுக்கான அதிகரித்து வரும் தேவையும்உள்நாட்டு எண்ணெய் வித்து உற்பத்தியை விரைவுபடுத்த வேண்டிய அவசியமும் உள்ளது. தற்சார்பை வலுப்படுத்த தொழில்நுட்ப மேம்பாடுவணிகமயமாக்கல் ஆகியவற்றை விரைவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது. இந்தச் சூழலில்ஐசிஏஆர் - ஐஐஓஆர் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட எண்ணெய் வித்து ரகங்கள்கலப்பினங்கள்ஆகியவை சார்ந்த விதை மேம்பாட்டுத் தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது.

இந்த மாநாடுவிதைத்தொழில் துறைஉயிரிப் பூச்சிக்கொல்லிஉயிரி உள்ளீட்டு நிறுவனங்கள்தொழில்நுட்ப உரிமதாரர்கள்வேளாண் வணிக நிறுவனங்கள்புத்தொழில் நிறுவனங்கள்தொழில்முனைவோர் ஆகியோரை ஒன்றிணைக்கும். அதேவேளையில்ஐசிஏஆர் - ஐஐஓஆர் தனது நம்பிக்கைக்குரிய தொழில்நுட்பங்களை வெளிப்படுத்துவதோடுதொழில்நுட்பப் பரிமாற்றம்உரிமம் வழங்குதல்அரசு-தனியார் ஒத்துழைப்புபெரிய அளவிலான செயலாக்கம் ஆகியவற்றுக்கான வாய்ப்புகளையும் ஆராயும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304989&reg=3&lang=1

***

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2305157) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Telugu