பிரதமர் அலுவலகம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டுக்கு இடையே ஈரான் அதிபருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
31 AUG 2026 3:54PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, பிஷ்கெக்கில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிற்கு இடையே, ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெஷெஷ்கியனுடன் இன்று (31.08.2026) இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தனர். மேலும், மேற்கு ஆசிய மோதலில் சமீபத்திய நிலை குறித்தும் அவர்கள் விவாதித்தனர். மாறிவரும் சூழ்நிலை குறித்த தங்களது கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர். பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிப்பது குறித்து பிரதமர் கவலை தெரிவித்ததோடு, அனைத்துப் பிரச்சனைகளும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
பிராந்தியத்தில் நீடித்த அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்வதற்கான தொடர் முயற்சிகளின் அவசியத்தையும் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். கப்பல் போக்குவரத்தையும் வர்த்தக சுதந்திரத்தையும் பாதுகாக்க அழைப்பு விடுத்த அவர், வணிகக் கப்பல்கள், மாலுமிகள், பொதுமக்கள், பொது உள்கட்டமைப்புகள் ஆகியோர் எந்தச் சூழ்நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட பலதரப்பு அமைப்புகளில் ஈரானுடன் நெருக்கமாக ஒத்துழைத்து செயல்பட இந்தியா தயாராக உள்ளதை மீண்டும் எடுத்துரைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக ஈரான் அதிபர் திரு பெஷெஷ்கியனை இந்தியாவிற்கு வரவேற்பதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
***
(Release ID: 2304950)
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2305088)
வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Gujarati
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam