பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேசத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான 14 வளர்ச்சித் திட்டங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார்

இடுகை இடப்பட்ட நாள்: 30 AUG 2026 1:42PM by PIB Chennai

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் ஆகியோர், உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்னோ கண்டோன்மென்ட்டில், இன்று (ஆகஸ்ட் 30, 2026), மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படும் 2 திட்டங்கள் உட்பட, ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான 14 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர்.

பாதுகாப்புத்துறை அமைச்சர், உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் ஆகியோர், சுமார் 4,000 பேருடன் இணைந்து பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'மனதின் குரல்' உரையையும் கேட்டனர்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் தமது உரையில், இந்த முன்முயற்சிகள் கண்டோன்மென்ட் பகுதியில் மக்களுக்கான பொது வசதிகள், கல்வி, சுகாதாரம், விளையாட்டு வசதிகள், தூய்மை, குடிநீர் விநியோகம் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு விரிவான முயற்சியைப் பிரதிபலிக்கின்றன என்று குறிப்பிட்டார். லக்னோ கண்டோன்மென்ட்டின் வளர்ச்சி, லக்னோ நகரின் முன்னேற்றத்துடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிகள், வளர்ச்சியையும் நல்லாட்சியையும் விரைவுபடுத்தும் என்றும் அவர் கூறினார்

உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் திரு பிரஜேஷ் பதக், மாநில அமைச்சர் திரு ஆசிம் அருண், மத்திய கட்டளைப் பிரிவின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அனிந்த்யா சென்குப்தா, மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் லக்னோ கண்டோன்மென்ட் வாரியத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304645&reg=48&lang=1

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2304719) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी