பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
தவிர்க்கக்கூடிய குறைபாடுகள் ஏற்படாதவாறு தடுப்பதில் பெண்களிடையே அதிக விழிப்புணர்வு தேவை - மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
29 AUG 2026 6:38PM by PIB Chennai
தாய்மார்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதன் மூலம், குழந்தைகளிடம் ஏற்படும் குறைபாடுகளை தொடக்க நிலையிலேயே கண்டறிய முடியும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
சக்ஷம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த அறிவார்ந்த பெண் சக்திகளின் சங்கமம் என்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
தவிர்க்கக்கூடிய குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுப்பது, மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்துவது குறித்து, பெண்களுக்குக் கல்வி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
குழந்தையின் வளர்ச்சி அல்லது உடல்நலம் சார்ந்த சிக்கல்களை பெரும்பாலும் தாய்மார்கள் தொடக்க நிலையிலேயே அறிந்து கொள்பவர்கள் என்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை, அவர்களை வலுப்படுத்தும் விரிவான நோக்கத்தின் ஒரு முக்கிய அங்கமாகப் பெண்ககளுக்கு கூடுதல் பங்கு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். கர்ப்ப காலத்தில் முறையான விழிப்புணர்வுடன் இருப்பது, அதாவது வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள், பரிந்துரைக்கப்பட்ட பரிசோதனைகளை மேற்கொள்வது போன்றவற்றின் மூலம், சில குறைபாடுகளை தொடக்க நிலையிலேயே கண்டறிய முடியும் என்றும், இதன் மூலம் சரியான தருணத்தில் மருத்துவ ஆலோசனை, சிகிச்சையைப் பெற்று, தவிர்க்கக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க முடியும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304539®=3&lang=1
***
SS/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304582)
வருகையாளர் எண்ணிக்கை : 12