பிரதமர் அலுவலகம்
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
29 AUG 2026 10:34AM by PIB Chennai
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, விளையாட்டு ஆர்வலர்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம், மன உறுதி ஆகியவை ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஹாக்கி வீரரும், சாதனையாளருமான மேஜர் தயான் சந்த்க்கு மரியாதை செலுத்திய பிரதமர், இந்திய ஹாக்கி அணிக்கு அவர் ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பும், அவரது திறமையும், பல தலைமுறையினருக்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"விளையாட்டை விரும்பும் ஒவ்வொருவருக்கும், உங்களது அர்ப்பணிப்பு, ஆர்வம், மன உறுதி ஆகியவை அனைவரையும் பெருமிதம் கொள்ளச் செய்கின்றன.
மேலும், தனது திறமையால் பல தலைமுறையினருக்கு உத்வேகம் அளித்து வரும் சாதனையாளர் மேஜர் தயான் சந்த்க்கும் மரியாதை செலுத்துகிறேன்."
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304465®=3&lang=1
***
SS/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304495)
வருகையாளர் எண்ணிக்கை : 10