பாதுகாப்பு அமைச்சகம்
புதுதில்லியில், இந்தியா-குவைத் கூட்டுப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
28 AUG 2026 5:10PM by PIB Chennai
இந்தியா-குவைத் கூட்டுப் பாதுகாப்புக் குழுவின் முதல் கூட்டம் இன்று (2026 ஆகஸ்ட் 28) புதுதில்லியில் நடைபெற்றது. ராணுவப் பயிற்சிகள், ராணுவ மருத்துவம், பாதுகாப்புத் ஆராய்ச்சி - மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
2024 டிசம்பரில் பிரதமர் திரு நரேந்திர மோடி குவைத்திற்கு மேற்கொண்ட பயணத்தின்போது கையெழுத்திடப்பட்ட, இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள நோக்கங்களைச் செயல்படுத்துவதை நோக்கிய ஒரு முக்கியப் படியாக கூட்டு பாதுகாப்புக் குழுவின் முதல் கூட்டம் அமைந்தது.
இந்தியாவும் குவைத்தும், பாரம்பரியமான நீண்ட நட்புறவைப் பேணி வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவுகள் 1962-ல் நிறுவப்பட்டன. டிசம்பர் 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி குவைத்திற்கு மேற்கொண்ட பயணத்தின்போது, இந்த உறவு ஒரு உத்திசார் ஒத்துழைப்பாக மேம்படுத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304285®=3&lang=1
(Release ID : 2304285)
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2304443)
வருகையாளர் எண்ணிக்கை : 9