சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பட்டியல் வகுப்பினருக்கான நலத்திட்ட உதவிகளின் கண்காணிப்பு, குறித்த நேரத்தில் அவை பயனாளர்களை சென்றடைவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு வலுப்படுத்துகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
28 AUG 2026 1:32PM by PIB Chennai
நாடு முழுவதுமுள்ள பட்டியல் சமூதாய மக்களுக்கான கல்வி, சமூக பொருளாதார அதிகாரமளித்தல், வாழ்வாதார மேம்பாடு, பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கடந்த 5 நிதியாண்டுகளில் பட்டியல் வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக், அதற்கு பிந்தைய கல்விக்கான உதவித் தொகை, தேசிய அளவில் ஆராய்ச்சி படிப்புகளுக்கான உதவித் தொகை, வெளிநாட்டுப் படிப்பிற்கான தேசிய கல்வி உதவித் தொகை, உயர்தர கல்வித் திட்டம், கட்டணமில்லா பயிற்சிகள், மெட்ரிக் படிப்பிற்கு முந்தைய கல்வி உதவித் தொகை, பின்தங்கிய பகுதிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உண்டு உறைவிட கல்வித் திட்டம், திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
பட்டியல் வகுப்பினருக்கான பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்த ஏதுவாக அந்தந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304124®=3&lang=1
****
SS/SV/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2304387)
வருகையாளர் எண்ணிக்கை : 6