மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

மருந்து உற்பத்தி, மருத்துவத் தொழில்நுட்பத் துறையில் புதிய கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5,000 கோடி மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 28 AUG 2026 1:39PM by PIB Chennai

மத்திய ராசயனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மருந்துப் பொருட்கள் துறை மருந்து உற்பத்தி, மருத்துவ தொழில்நுட்பத்துறையில் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. ரூ.5,000 கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய இந்தத் திட்டம், புத்தொழில் நிறுவனங்க்ள எம்எஸ்எம்இ நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்கான நடவடிக்கைகளில் முனைப்புடன் செயல்பட ஊக்கமளிப்பதன் மூலம் நாட்டின் மருந்து உற்பத்தி, மருத்துவத் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான சூழலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொடக்க நிலையில், முன்னுரிமை அளிக்கப்படும் துறைகளில் (தொழில்நுட்பத் தயார் நிலையில்) உள்ள  தயாரிப்புகள் அல்லது தொழில்நுட்பங்களை ஒரு குறிப்பிட்ட நிலையில் செயல்படுத்துவதற்கான புத்தொழில் மற்றும் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய தகுதி பெறும். இத்திட்டத்தின் கீழ் ஒரு திட்டத்திற்கு தலா ரூ.5 கோடி வரை நிதியுதவி வழங்கப்படும்.

இரண்டாவது நிலையிலுள்ள தொழில்நுட்பம் சார்ந்த  தயாரிப்புகளில் ஈடுபடும் நிறுவனங்கள் இதில் பங்கேற்க தகுதி பெறும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு திட்டத்திற்கு தலா ரூ.100 கோடி வரை நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

எனினும், இந்த நிதியுதவி நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட மொத்த திட்டச் செலவில் அதிகபட்சமாக 35 சதவீதம் வரை மட்டுமே வழங்கப்படும். எஞ்சியுள்ள தொகைகளை விண்ணப்பதாரர் அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கான படிவங்கள், வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்த அனைத்து விவரங்களும்  https://prip.pharma-dept.gov.in/.  என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ள முடியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304134&reg=3&lang=1

***

SS/SV/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2304377) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati