பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகின் உற்பத்தி, ஏற்றுமதிக்கு உகந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் வகையில் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி சார்ந்த கட்டமைப்பு விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 28 AUG 2026 1:37PM by PIB Chennai

மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா ஆகிய முன் முயற்சிகளின் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் நம்பகமான, போட்டித்தன்மையுடன் கூடிய உலகின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி, ஏற்றுமதிக்கான நட்பு நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்ய வேண்டுமென்பதில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமரின் இத்தகைய தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித்துறை விரிவான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கின் வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் நடைமுறைகள் சார்ந்த தேவைகளை குறைப்பதற்கும் சர்வதேச சந்தை வாய்ப்புகளை விரைவாக பெறுவதற்கும் உலக அளவிலான வர்த்தக வாய்ப்புகளுக்கு இந்திய உற்பத்தி நிறுவனங்களின் திறனை  அதிகரிக்கவும் வழிவகுக்கின்றன.

தேசிய பாதுகாப்புச் சார்ந்த அம்சங்களும் முழுமையாக பாதுகாக்கப்படுவதை இந்தச் சீர்திருத்த நடவடிக்கைகள் உறுதி செய்கின்றன.

இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவாக்குவதற்கும் உதவுகின்றன. சர்வதேச அளவிலான ஒப்பந்தப்புள்ளிகள், கண்காட்சிகளில் பங்கேற்பதற்கும் சர்வதேசத் சந்தை வாய்ப்புகளை எளிதில் பெறும் வகையில் தேவையான இணக்க நடைமுறை குறைப்பதற்கும் உதவுவதன் மூலம் பாதுகாப்புத் தளவாட உற்பத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு குறிப்பாக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பெரிதும் பயன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2025-26-ம் நிதியாண்டில் பாதுகாப்பு தளவாடங்களின் உற்பத்தி மதிப்பு ரூ.1.78 லட்சம் கோடியை எட்டியுள்ளது. மேலும் பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி மதிப்பு ரூ.38,424 கோடி என்ற சாதனை அளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304130&reg=3&lang=1

***

SS/SV/PS/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2304346) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali