பிரதமர் அலுவலகம்
மகாத்மா அய்யன்காளி பிறந்த தினத்தையொட்டி பிரதமர் அவருக்கு மரியாதைச் செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 AUG 2026 1:35PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி மகாத்மா அய்யன்காளியின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மரியாதைச் செலுத்தினார். விளிம்புநிலை மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும், நலவாழ்விற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவரும் சமூக நீதிக்கான மாபெரும் முன்னோடியாகவும் விளங்கிய மகாத்மா அய்யன்காளியை திரு நரேந்திர மோடி நினைவுகூர்ந்தார். விளிம்புநிலை மக்கள் கல்வி வாய்ப்புக்களைப் பெறுவதற்கும், விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும், ஏழைகளுக்குச் சேவையாற்றுவது ஆகியவற்றில் அவர் மேற்கொண்ட முயற்சிகளைப் பிரதமர் எடுத்துரைத்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
மகாத்மா அய்யன்காளியின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
சமூக நீதியின் முன்னோடியாக அவர் என்றென்றும் நினைவு கூரப்படுகிறார். விளிம்பு நிலை மக்களின் கல்வி வாய்ப்புகள், விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாடு, ஏழைகளுக்குச் சேவை செய்தல் ஆகியவற்றில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் மிகவும் உத்வேகம் அளிப்பதாகவும் உள்ளது. சமூக மேம்பாட்டிற்காக பணியாற்றும் அனைவருக்கும் அவரது வாழ்க்கை வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது.
***
(Release ID: 2304126)
SS/SV/PS/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304329)
வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam