குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கோடை கால பயிற்சித் திட்டத்தின் கீழ் 8,000 பொறியியல் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 28 AUG 2026 11:27AM by PIB Chennai

நாட்டின் தொழில்துறைக்குத் தரமான பணியாளர்களை வழங்கும் வகையில் மத்திய குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள மத்திய கருவி அறை, பயிற்சி மையம் மே, ஜூன் மாதங்களில் நான்கு வார கோடைகாலப் பயிற்சித் திட்டத்தை நடத்தியது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலுமுள்ள 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 8,083 பொறியியல் மாணவர்களுக்கு (சூடான், ஏமன் நாடுகளைச் சேர்ந்த 26 மாணவர்கள் உட்பட) தொழில்துறைச் சார்ந்த நேரடிப் பயிற்சி வழங்கப்பட்டது.

இந்தப் பயிற்சித் திட்டத்தில் முதலாம் ஆண்டு முதல்  இறுதி ஆண்டு வரை பயிலும் பொறியியல் மாணவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதுடன் சர்வதேச அளவிலான மாணவர்களுக்கும் நேரடிப்பயிற்சி வழங்கப்படுகிறது.

நாட்டிலுள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பு, தொழில்நுட்பத்திறனை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சித் திட்டம் முறையான தொழில்துறைச் சார்ந்த பயிற்சிகளை வழங்குகிறது.

எந்திரவியல், மின்சாரம், மின்னணுவியல், கட்டுமானம், கனிணி அறிவியல் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்தத்திட்டம் செயற்கை நுண்ணறிவு, கிளவுடு கம்ப்யூட்டிங் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களிலும் பயிற்சி வழங்குவதிலும் கவனம் செலுத்துகிறது. வகுப்பறைக் கற்றலுக்கும், தொழில்துறை நடைமுறைக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கும் வகையில் நேரடிப்பயிற்சி வழங்க ஏதுவாக நான்கு வார காலப் பாட நெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304059&reg=3&lang=1

***

SS/SV/PS/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2304179) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी