மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 27 AUG 2026 3:45PM by PIB Chennai

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சகோதர சகோதரிகளுக்கு இடையேயான பரஸ்பர அன்பு, பாசம், நம்பிக்கையைக் கொண்டாடும் மங்களகரமான ரக்ஷா பந்தன் திருநாளில் அனைவருக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பண்டிகை நமது நாட்டின் வளமான கலாச்சாரம், குடும்ப விழுமியங்கள், பிரிக்க முடியாத பாசப் பிணைப்பின் அடையாளமாகும். வெறும் ரக்ஷா பந்தன் கயிறு கட்டும் பண்டிகை மட்டுமல்லாமல், நம்பிக்கை, மரியாதை, அன்பு, ஒருவருக்கொருவர் துணையாக நிற்பதற்கான வாழ்நாள் உறுதிமொழியின் கொண்டாட்டமாகவும் இப்பண்டிகை திகழ்வதாக அவர் கூறியுள்ளார். சகோதரியின் மகிழ்ச்சி, பாதுகாப்பு, கண்ணியத்தை ஒவ்வொரு சகோதரனும் தனது பொறுப்பாகக் கருதுகிறார். அதே நேரத்தில் சகோதரனின் மகிழ்ச்சி, நல்ல உடல்நலன், வெற்றி, ஒளிமயமான எதிர்காலத்திற்காக ஒவ்வொரு சகோதரியும் மனதார பிரார்த்திக்கிறார். இந்த தன்னலமற்ற பாசம், குடும்பங்களை பலப்படுத்தி, சமூகத்தை வலிமையாக்குகிறது.

நமது கலாச்சாரத்தில் பெண்களின் மரியாதை, கண்ணியம், உரிமைகள், கனவுகளைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டையும் இது குறிக்கிறது. சமூகத்தில் உள்ள ஒவ்வொரு மகளும், சகோதரியும் பாதுகாப்பாகவும், மரியாதையுடனும், தன்னம்பிக்கையுடனும் முன்னேறும்போதுதான் நமது நாடு வலிமையும் அதிகாரமும் பெறும். மாறிவரும் இன்றையக் காலகட்டத்தில் குடும்பங்களுக்குள் அன்பு, நம்பிக்கை, வெளிப்படையான உரையாடல்களுக்கும், பெண் குழந்தைகளுக்குச் சம வாய்ப்புகளை வழங்கவும், சமூகத்தில் சகோதரத்துவம், நல்லிணக்கம், ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தவும் நாம் உறுதியேற்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303732&reg=3&lang=1  

***

SS/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2303878) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Kannada