பிரதமர் அலுவலகம்
உதம்பூரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
20 APR 2026 1:02PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்குப் பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்தார்.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000 மும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
“ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi”
***
(Release ID: 2253687)
SS/IR/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2303808)
வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam