பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அட்சய திரிதியையையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 APR 2026 10:50AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, அட்சய திரிதியை எனும் மங்களகரமான நன்னாளில் நாட்டு மக்களுக்குத் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தப் புனிதமான பண்டிகை, நற்செயல்கள், தர்மம், சேவை ஆகிய பாதைகளில் தொடர்ந்து பயணிக்க மக்களை ஊக்குவிக்கிறது என்று பிரதமர் கூறியுள்ளார். இந்த நன்னாளானது அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு, நல்ல ஆரோக்கியம் ஆகியவற்றைக் கொண்டுவரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

அட்சய திரிதியை தினத்தில் நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் புனிதமான பண்டிகை, நற்செயல்கள், தர்மம், சேவை ஆகிய பாதைகளில் தொடர்ந்து பயணிக்க நம்மை ஊக்குவிக்கிறது. இந்த நன்னாளானது அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம், நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டுவரட்டும். அனைவரும் நல்ல பலன்களை அடைய வேண்டும் என்பதே எனது விருப்பம்.”

****

(Release ID: 2253474)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2303752) வருகையாளர் எண்ணிக்கை : 16