வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-மொராக்கோ கூட்டு ஆணைய அமர்வில் மத்திய இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா பங்கேற்பு : ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க உறுதி

இடுகை இடப்பட்ட நாள்: 26 AUG 2026 6:09PM by PIB Chennai

மத்திய வர்த்தக, தொழில் துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா, 2026 ஆகஸ்ட் 24 முதல் 25 வரை மொராக்கோவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது, ​​அவர் மொராக்கோவின் அமைச்சர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். இப்பயணத்தின் போது, ​​அவர் மொராக்கோ வர்த்தக அமைச்சர் திரு உமர் ஹெஜிராவுடன் இணைந்து, இந்தியா-மொராக்கோ கூட்டு ஆணையத்தின் 7-வது அமர்வின் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.

 

தமது பயணத்தின் போது, ​​திரு ஜிதின் பிரசாதா மொராக்கோ-இந்தியா வர்த்தக மன்றக் கூட்டத்திலும் பங்கேற்றார். இந்திய வர்த்தக சமூகத்தினருடன் அவர் கலந்துரையாடினார்.

 

திரு பிரசாதாவுடன் இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தலைமையிலான ஒரு உயர்மட்ட வணிகக் குழுவும் சென்றது.

7-வது இந்தியா-மொராக்கோ கூட்டுக் ஆணையக் குழு அமர்வு, இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புக்குப் புத்துயிர் அளித்ததுடன், வர்த்தகத்தை அதிகரித்தல், சந்தை அணுகலை வலுப்படுத்துதல், முதலீடுகளை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கும் வழி வகுப்பதாக அமைந்தது.

 

இரு தரப்பினரும் இருதரப்பு பொருளாதார, வர்த்தக உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வுசெய்ததுடன், வர்த்தகம், முதலீடு, தொழில், உரங்கள், விவசாயம், மருந்துப் பொருட்கள், எரிசக்தி, சுரங்கம், டிஜிட்டல் மாற்றம், போக்குவரத்து, பரஸ்பர நலன் சார்ந்த பிற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த ஒப்புக்கொண்டனர். 2025-ம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில் செயல்பட அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303550&reg=48&lang=1

(Release ID : 2303550)

****

SS/PLM/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2303574) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी