தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளத்தில் ஆகஸ்ட் மாத ஓய்வூதியத்தை இபிஎஃப்ஓ விடுவித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 26 AUG 2026 2:49PM by PIB Chennai

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, ஓணம் பண்டிகைக்கு முன்னதாக, இன்று (ஆகஸ்ட் 26, 2026), கேரளம் மண்டலத்தைச் சேர்ந்த 4,40,901 ஓய்வூதியதாரர்களின் கணக்குகளில் 2026 ஆகஸ்ட் மாதத்திற்கான ஓய்வூதியத்தை வரவு வைத்துள்ளது. இபிஎஃப்ஓ ​​தனது உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

 

வழக்கமாக, 1995-ம் ஆண்டு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியம் மாத இறுதியில் வழங்கப்படும். இருப்பினும், ஓணம் பண்டிகையைக் கருத்தில் கொண்டு, ஓய்வூதியதாரர்களும் அவர்களது குடும்பத்தினரும் தங்களது நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்து, எவ்வித சிரமமுமின்றி பண்டிகையைக் கொண்டாட ஏதுவாக, ​​2026 ஆகஸ்ட் 26 அன்று ஓய்வூதியத்தை வழங்க இபிஎஃப்ஓ சிறப்பு ஏற்பாடுகளைச் செய்தது.

 

இபிஎஃப்ஓ-ன் மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய செலுத்து முறை மூலம் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த முறை, நாடு முழுவதும் உள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ஓய்வூதியத்தை நேரடியாகவும் தடையின்றியும் பரிமாற்றம் செய்ய உதவுகிறது.

 

சமூகப் பாதுகாப்புப் பலன்களை உரிய நேரத்தில் வழங்குவதை உறுதி செய்வதில் இபிஎஃப்ஓ ​​உறுதியாக உள்ளதுடன், தொழில்நுட்பம் சார்ந்த சீர்திருத்தங்கள் மூலம் ஓய்வூதிய சேவைகளை மேம்படுத்தவும் தொடர்ந்து பாடுபடுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2303492&reg=3&lang=1

(Release ID: 2303492)

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2303541) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Malayalam