எஃகுத்துறை அமைச்சகம்
வளர்ச்சிப் பாதையில் இந்திய எஃகு உற்பத்தித் துறை
இடுகை இடப்பட்ட நாள்:
25 AUG 2026 1:07PM by PIB Chennai
இந்திய எஃகு உற்பத்தித் துறை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. எஃகு உற்பத்தியை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய எஃகு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக எஃகு மற்றும் சுரங்கத் துறையில் டிஜிட்டல் மயமாக்கல் குறித்த மாதாந்திர இணையவழிக் கருத்தரங்குத் தொடரை எஃகு அமைச்சகம் தொடங்கியுள்ளது. இது மூலம் டிஜிட்டல் அடிப்படையிலான தீர்வுகளைக் காட்சிப்படுத்தவும், அவற்றைச் செயல்படுத்துவதில் உள்ள அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் வளர்ந்து வரும் வாய்ப்புகள் குறித்து விவாதிப்பதற்கும் ஒரு தளமாக அமைகிறது. இதில் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கிறது.
எஃகு துறையில் டிஜிட்டல் பயன்பாடுகளை விரிவுப்படுத்தும் வகையில் முதலாவது இணையவழிக் கருத்தரங்கு 21.08.2026 அன்று நடைபெற்றது. இத்தகைய இணையவழிக் கருத்தரங்குகள் துறை சாரந்த திறன்களை ஊக்குவிப்பதற்கும் உலோகத் துறையில் வளர்ச்சியை உறுதிசெய்வதற்கும் உதவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கென சுரங்கங்கள், கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைத் திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது, எஃகு துறைக்கான மூலப்பொருட்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் சுரங்கத் துறையில் முதலீடுகளுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் உதவிடும். மேலும், உள்நாட்டில் கிடைக்கும் இரும்புத் தாது உள்ளிட்ட முக்கியக் கனிம வளங்களின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் உதவிடும்.
எஃகு அமைச்சகத்தின் பசுமை எஃகு உற்பத்திக்கான முன்முயற்சிகளின் கீழ், 15 மாநிலங்களைச் சேர்ந்த 98 எஃகு உற்பத்தியாளர்கள் பசுமை எஃகு உற்பத்திக்கான சான்றிதழைப் பெற்றுள்ளனர். இதன்படி, கட்டுமானத்திற்கு தேவையான முறுக்குக் கம்பிகள் (டிஎம்டி), எஃகு தகடுகள், கம்பிகள், குழாய்கள் உள்ளிட்ட தயாரிப்புகள் இந்தச் சான்றிதழ் வரம்பிற்குள் வருகின்றன. இவ்வாறு சான்றளிக்கப்பட்ட எஃகு பொருட்களின் தயாரிப்பில் பெரும்பாலானவை மிக உயர்ந்த ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளன. இது இந்தியாவின் இரண்டாம் நிலை மற்றும் நடுத்தர அளவிலான எஃகு உற்பத்தியாளர்களிடையே குறைந்த கார்பன் உமிழ்வுடன் கூடிய எஃகு உற்பத்தி முறைகள் பின்பற்றப்படுவதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303018®=3&lang=1
***
SS/SV/GS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2303291)
வருகையாளர் எண்ணிக்கை : 10