குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்குக் காலதாமதமாகச் செலுத்தப்படும் தொகை குறித்த 65 வழக்குகளுக்கு குறைதீர்க்கும் மன்றம் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
25 AUG 2026 10:31AM by PIB Chennai
மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்துடன் இணைந்து தெலங்கானா மாநில வர்த்தகத் துறை ஆணையரகம் ஏற்பாடு செய்திருந்த தாமதக் கட்டணங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்காக நிரந்தர குறைதீர் மன்றம் மூலம் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் குறைதீர் மன்றங்கள் வாயிலாக ரூ.8.29 கோடி மதிப்பிலான 65 காலதாமதக் கட்டணம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்தக் குறைதீர் மன்றத்தில் குறு, சிறு, நிறுவனங்கள், நுகர்வோர், பொதுத் துறை நிறுவனங்கள், பிரச்சனைகளுக்கான மாற்று முறை தீர்வு அமைப்புகள், மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகம், தெலங்கானா மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
எம்எஸ்எம்இ நிறுவனங்களைப் பொருத்த வரை தாமதமாகச் செலுத்தப்படும் தொகை என்பது விலைப்பட்டியல் தொடர்பான தொகை மட்டுமல்ல. மாறாக, இது சம்பளம், மூலப் பொருட்களின் கொள்முதல், கடன்களைத் திருப்பிச் செலுத்துதல், புதிய வர்த்தக வாய்ப்புகளைப் பெறுவதற்கான திறன் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உரிய நேரத்தில் இதுபோன்ற பிரச்சனைகளுக்குச் சுமூகமாகத் தீர்வு காண்பதன் மூலம் எம்எஸ்எம்இ நிறுவனங்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் உதவுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302977®=3&lang=1
***
SS/SV/GS/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2303032)
வருகையாளர் எண்ணிக்கை : 52