சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2011 - 2020 ஆண்டுகளில் இந்தியா 21.76 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை மீட்டு, மறுசீரமைத்துள்ளது- மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்

प्रविष्टि तिथि: 24 AUG 2026 2:58PM by PIB Chennai

இந்தியாவில் நிலமீட்பு என்பது தேசிய முன்னுரிமை என்றும், நீடித்த நில மேலாண்மை, பல்லுயிர் பாதுகாப்பு, பருவநிலை நடவடிக்கை, கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றில் நாட்டின் முயற்சிகளுக்கு இது இன்றியமையாதது என்றும், மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

மங்கோலியாவின் உலான்பாதரில் நடைபெற்ற பாலைவனமாதலை தடுப்பதற்கான ஐநா உடன்படிக்கையின், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான ஒப்பந்தத்தின் 17-வது மாநாட்டில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார். நில மீட்பை, இந்தியா தனிப்பட்ட முயற்சியாகக் கொள்ளாமல், நீடித்த மீள்திறன் கொண்ட மேம்பாட்டின் முக்கிய அம்சமாக கருதுகிறது என்று கூறினார்.

2015-ம் ஆண்டில் உருக்குலைந்த காடு, அழிக்கப்பட்ட நிலங்களை புனரமைப்பதற்கான உறுதிமொழியை இந்தியா முதலில் அளித்ததாக அமைச்சர் தெரிவித்தார். இதன் இலக்கு 2030-ம் ஆண்டுக்குள் 26 மில்லியன் ஹெக்டேராக அதிகரிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

2011 – 2020 ஆண்டு காலக்கட்டத்தில் இந்தியா 21.76 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை மீட்டெடுத்துள்ளதாகவும், சுமார் 1.22 பில்லியன் மனித வேலைவாய்ப்பு நாட்கள் உருவாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்தப் பணிகள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கி கிராமப்புற வாழ்வாதாரங்களுக்கு உதவுவதன் மூலம் சுற்றுச்சூழல், சமூக பொருளாதார விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302676&reg=3&lang=1

***

SS/IR/LDN/SH


(रिलीज़ आईडी: 2302880) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR