வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா ஆகஸ்ட் 24, 25-ம் தேதிகளில் மொராக்கோவில் பயணம் மேற்கொள்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
24 AUG 2026 12:37PM by PIB Chennai
மத்திய வர்த்தகம், தொழில்துறை, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா 2026 ஆகஸ்ட் 24, 25-ம் தேதிகளில் மொராக்கோவில் பயணம் மேற்கொள்கிறார்.
அங்கு நடைபெறும் இந்தியா-மொராக்கோ கூட்டு குழுவின் 7-வது அமர்வில் மொராக்கோவின் தொழில்துறை, வர்த்தகத் துறை அமைச்சர் திரு ஒமர் ஹெஜிராவுடன் இணைந்து பங்கேற்கிறார்.
இந்தக் கூட்டுக் குழுக் கூட்டம் இருதரப்பு பொருளாதார, வர்த்தக ஒத்துழைப்பின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பரஸ்பர நலன் சார்ந்த உறவுகளை வலுப்படுத்தவும், விரைவுப்படுத்தவும் பணியாற்றுவதற்கான வாய்ப்பு இக்கூட்டத்தால் ஏற்படும். வர்த்தகம், சந்தை அணுகல் உர உற்பத்தி, விநியோக ஒத்துழைப்பு, முதலீடு, தொழில்துறை ஒத்துழைப்பு, சுங்கம், வேளாண்மை, உணவு பாதுகாப்பு, மருந்து உற்பத்தி, சுகாதாரம், எரிசக்தி, சுரங்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் மாற்றம், போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, ஆயுஷ், சுற்றுலா, கல்வி, திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302626®=3&lang=1
***
SS/IR/SU/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2302859)
வருகையாளர் எண்ணிக்கை : 48