பாதுகாப்பு அமைச்சகம்
ஐஎன்எஸ் சுதர்ஷினி கப்பல் போர்ச்சுகல் சென்றடைந்தது
प्रविष्टि तिथि:
23 AUG 2026 12:37PM by PIB Chennai
இந்திய கடற்படையின் பாய்மரப் பயிற்சி கப்பலான ஐஎன்எஸ் சுதர்ஷினி, தனது தொடர்ச்சியான லோக்காயன் 26 என்ற கடல்கடந்த பயணத்தின் ஒரு பகுதியாக, 2026 ஆகஸ்ட் 22 அன்று போர்ச்சுகலின் லிஸ்பன் நகரைச் சென்றடைந்தது. மூன்று பாய்மரங்களைக் கொண்ட இந்தக் கப்பல், தாகஸ் நதியில் பாரம்பரிய பாய்மரப் படகோட்டுதலை மேற்கொண்டும் கடற்பயணத் திறன்களை வெளிக்காட்டியும் ஒரு பிரமாண்டமான நுழைவை மேற்கொண்டது.
துறைமுகப் பயணத்தின் போது, கப்பல் பணியாளர்களும் பயிற்சியாளர்களும் போர்ச்சுகீசிய கடற்படைத் தலைமை அதிகாரியுடனும், உள்ளூர் அதிகாரிகளுடனும் கலந்துரையாடுவார்கள். அத்துடன் தொழில்முறைப் பரிமாற்றங்கள், கப்பல்களுக்கு இடையேயான சந்திப்புகள், கலாச்சார நிகழ்வுகள் ஆகியவற்றிலும் பங்கேற்பார்கள்.
ஏழு மாதக் கடல் பயணத்தில், லிஸ்பன் துறைமுகத்திற்கு கப்பல் மேற்கொள்ளும் இந்த பயணம் 15-வது துறைமுகப் பயணமாகும். இது, உலகெங்கிலும் இந்தியாவின் நீடித்த கடல்சார் இணைப்பையும் நல்லெண்ண உணர்வையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. லோக்காயன் 26 பயணத்தின் ஒரு பகுதியாக, ஐஎன்எஸ் சுதர்ஷினி, நட்பு நாடுகளுடனான பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302441®=3&lang=1
***
SS/PLM/PD
(रिलीज़ आईडी: 2302467)
आगंतुक पटल : 7