சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுகாதாரப் பணிகளின்போது உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுப்பது குறித்த தேசியப் பயிலரங்கம்

प्रविष्टि तिथि: 22 AUG 2026 3:51PM by PIB Chennai

நிறுவன ரீதியான கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், பொருத்தமான தொழில்நுட்பங்களை ஊக்குவித்தல், செயல்பாட்டுத் தயார்நிலையை உறுதிசெய்தல், நாடு முழுவதும் உள்ள நகரங்களில் எந்திரமயமாக்கப்பட்ட துப்புரவுப் பணிகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் ஒரு பகுதியாக, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள மக்கள் சேவை மாளிகையில் உள்ள மாநில மாநாட்டு மையத்தில் 'பூஜ்ஜிய இலக்கு இயக்கம் - துப்புரவுப் பணிகளில் உயிரிழப்புகளை ஒழித்தல்' குறித்த தேசியப் பயிலரங்கம் இன்று நடைபெற்றது.

இப்பயிலரங்கில் ஒடிசா மாநில முதலமைச்சர் திரு மோகன் சரண் மஜ்ஜி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலாளர் திரு சுதான்ஷ் பந்த், ஒடிசா மாநிலத் தலைமைச் செயலாளர் திருமதி அனு கார்க், அம்மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி உஷா பாதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பான, முறையான மற்றும் கண்ணியமான சுகாதாரச் சேவைகளை உறுதிசெய்ய, ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் அவசியம் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைச் செயலாளர் திரு சுதான்ஷ் பந்த் தெரிவித்தார்.

துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்துள்ளவர்களுக்கான எந்திரமயமாக்கல் நடைமுறைகளை ஊக்குவிக்கவும், தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, வாழ்வாதார வாய்ப்புகளை உறுதிசெய்யவும் நமஸ்தே, கரிமா போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302324&reg=3&lang=1

****

SS/SV/RJ


(रिलीज़ आईडी: 2302384) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , हिन्दी , Gujarati , English