ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெண்கள் தலைமையிலான கிராமப்புறத் தொழில்முனைவு முன் முயற்சிகளின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் நடவடிகைகள் ஆய்வு

प्रविष्टि तिथि: 22 AUG 2026 9:53AM by PIB Chennai

மத்திய ஊரக மேம்பாட்டுத் துறைச் செயலாளர் திரு ரோஹித் கன்சால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர் அதிகாரம் கொண்ட குழு, இன்று தீன்தயாள் அந்த்யோதயா திட்டத்தின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண் சாராத வாழ்வாதாரப் பிரிவின் கீழ், சில முன்மொழிவுகளை ஆய்வு செய்தது.

பெண்கள் தலைமையிலான கிராமப்புறத் தொழில்முனைவு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல்,  விரிவுபடுத்துதல், சுயஉதவிக் குழுக்களின் சிறிய அளவிலான தொழில்களை உயர்நிலை, வளர்ச்சி சார்ந்த வணிகங்களாக மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்குதல் ஆகியவை இந்த ஆய்வுக் கூட்டத்தின்  நோக்கமாகும்.

இக்கூட்டத்தில், ஊரக வாழ்வாதாரப் பிரிவு இணைச் செயலாளர்களான திரு அமித் சுக்லா, திருமிகு ஸ்வாதி சர்மா ஆகியோர் கலந்துகொண்டனர். கிராமப்புறப் பெண்களுக்குத் தொழில்முனைவு சார்ந்த வாழ்வாதார வாய்ப்புகளை விரைவுபடுத்துவதுடன், 6 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்கும் தேசிய இலக்கை அடைவதற்கான பங்களிப்பு குறித்தும் இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

பீகார், ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து நான்கு புதிய தொழில் வளர்ச்சி ஊக்குவிப்பு மையம் அமைப்பதற்கான முன்மொழிவுகளை இந்த உயர்நிலைக் குழு பரிசீலித்தது. இதற்காக முறையே ஐஐடி பாட்னா, ஐஐஎம் ஜம்மு, ஐஐஎம் லக்னோ, ஐஐடி காந்திநகர் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களும், தொழில் வளர்ச்சி ஊக்குவிப்பு மையம் அமைப்பதற்காக சமர்பித்த முன்மொழிவுகளையும் உயர்நிலைக் குழு பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. அந்தந்த மாநிலங்களின் முதன்மைச் செயலாளர்கள் / செயலாளர்கள், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இயக்குநர்கள்/தலைமைச் செயல் அதிகாரிகள், முன்மொழியப்பட்ட ஊக்குவிப்பு மைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தனர். வணிக உத்தி, வழிகாட்டுதல், நிதிசார்த் திட்டமிடல், முறைப்படுத்துதல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், சந்தை வாய்ப்புகள், நிதி வசதிகளைப் பெறுதல் ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம், அதிக திறன் கொண்ட 600-க்கும் அதிகமான கிராமப்புறத் தொழில்முனைவு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நான்கு திட்டங்களும் முன்மொழியப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302239&reg=3&lang=1

***

SS/SV/RJ


(रिलीज़ आईडी: 2302359) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati