குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
இந்தியாவின் வளமான பாரம்பரிய இசை மரபைப் போற்றும் வகையில், 'மல்ஹர் 2026' நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார், குடியரசு துணைத்தலைவர்
प्रविष्टि तिथि:
21 AUG 2026 8:55PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், புதுதில்லியில் 'அந்தர் ஹிருதய் கனெக்ட்' அமைப்பின் சார்பில் நடைபெற்ற, இளைஞர்களை மையமாகவும் பருவமழையை மையக்கருவாகவும் கொண்ட 'மல்ஹர் 2026' என்ற இந்தியக் கர்நாடக இசை விழாவை இன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத்தலைவர், பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம், இந்தியாவின் வளமான பாரம்பரிய இசை மரபை அனுபவிக்கவும் அதில் ஈடுபடவும் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கியதற்காக 'அந்தர் ஹிருதய் கனெக்ட்' அமைப்பைப் பாராட்டினார்.
இந்தியா முழுவதும் ஒவ்வொரு பிராந்தியமும் தனக்கே உரித்தான இசை மரபுகள், ஒலிகள், பாணிகளைக் கொண்டிருந்தாலும், நாட்டை ஒன்றிணைக்கும் மிக வலிமையான இழைகளில் ஒன்றாக இசை திகழ்கிறது என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார். இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை, "பல்வேறு இசை மரபுகள், ஒரே உணர்வு; ஏராளமான குரல்கள், ஒரே இந்தியா" என்று அவர் வர்ணித்தார்.
மல்ஹர் ராகக் குடும்பம் பாரம்பரியமாகப் பருவமழையுடன் தொடர்புடையது என்று குறிப்பிட்ட அவர், மனித மனத்திற்குப் புத்துணர்ச்சியூட்டவும், கற்பனைத் திறனைத் தட்டி எழுப்பவும், நம்பிக்கையை ஊட்டவும் கூடிய ஆற்றல் கொண்ட இசையின் மூலம், 'மல்ஹர்' என்பதைப் புதுப்பித்தலின் குறியீடாக விவரித்தார்.
இந்தியாவின் பாரம்பரிய இசை மரபு தொடர்ந்து பரிணாம வளர்ச்சியை சந்தித்து வருவதாலேயே அது இன்றும் ஒரு உயிர்ப்புள்ள மரபாகத் தொடர்ந்து விளங்குகிறது என்று குடியரசு துணைத்தலைவர் தெரிவித்தார். இந்தியாவின் நாகரிகப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பவர்களாகவும், அதன் தூதுவர்களாகவும் இளைஞர்கள் திகழ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதுடன், நாட்டின் பாரம்பரிய இசை மற்றும் கலாச்சார மரபுகளை உலகம் முழுவதும் உள்ள சமூகங்களிடம் கொண்டு சேர்க்க அவர்களை ஊக்குவித்தார். மேலும், மொழி மற்றும் எல்லைகளைக் கடந்து, நட்பு, புரிதல் மற்றும் நல்லெண்ணத்தை வளர்க்கும் ஆற்றல் கொண்ட இந்தியாவின் மிகச்சிறந்த மென் ஆற்றல் வடிவங்களில் ஒன்றாக இசையை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2302178®=3&lang=1
****
SS/BR/SH
(रिलीज़ आईडी: 2302208)
आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English